BREAKING... லாஸ் ஏஞ்சல்ஸ் நிலநடுக்கம்... தரையிறங்க வந்த விமானம் மீண்டும் வானில் பறந்த திக் திக் நிமிடங்கள்... வைரல் வீடியோ!

 
விமானம்

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மன்ஹாட்டன் கடற்கரைக்குத் தென்மேற்கே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகளும் உணரப்பட்டன.

நிலநடுக்கம் ஏற்பட்ட சரியான நேரத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என எச்சரித்து விமானத்தை உடனடியாகத் தரையிறக்காமல் மீண்டும் வானில் பறக்குமாறு உத்தரவிட்டனர்.

ஓடுபாதையை நெருங்கிய விமானம் மீண்டும் மேல்நோக்கிப் பறந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகப் பாதுகாப்பாகத் தரையிறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பெரிய அளவிலான சேதமோ ஏற்படவில்லை என்றும், சுனாமி எச்சரிக்கை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்