20 ஆண்டுகளாக ஒரே எண்களில் லாட்டரி சீட்டுகள்.. ஒரே நாளில் 3 ஜாக்பாட்... ரூ. 1.42 கோடி பரிசை வென்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர்!

 
lottery

 

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தைச் சேர்ந்த 66 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாட்டரி விளையாடி வருகிறார். இவர் எப்போதும் தனது குடும்பத்தினரின் பிறந்த எண்கள் மற்றும் ராசி எண்களை மட்டுமே (5, 6, 8, 12, 30) தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார்.

 

  • நேற்று முன் தினம் செப்டம்பர் 9ம் தேதி (புதன்கிழமை), மேரிலாந்து லாட்டரியின் 'போனஸ் மேட்ச் 5' என்ற விளையாட்டிற்காக அவர் லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.

  • வழக்கமாக ஒரு சீட்டு மட்டுமே வாங்கும் அவர், அன்று ஏனோ தெரியவில்லை, அதே எண்களைக் கொண்டு மொத்தம் 3 லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.

 

லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியான போது, அவர் தேர்ந்தெடுத்த அதே எண்களுக்கு முதல் பரிசு விழுந்திருந்தது. அவர் ஒரே எண்களில் 3 சீட்டுகளை வாங்கியிருந்ததால், 3 சீட்டுகளுக்குமே தலா 50,000 டாலர்கள் வீதம் மொத்தம் 1,50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.42 கோடி) பம்பர் பரிசாகக் கிடைத்துள்ளது. ஒரே எண்களைத் தொடர்ந்து பயன்படுத்தி ஒரே நாளில் மூன்று மடங்கு பரிசை வென்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.