ஓய்வறை ரகசியங்கள் கசிந்த விவகாரம்... பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் 4 மணி நேரம் தீவிர விசாரணை!

 
பாகிஸ்தான்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி மற்றும் ஒழுங்கீனப் புகார்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வி மற்றும் அணியில் நிலவிய ஒழுங்கீனப் புகார்களின் காரணமாக, முகமது ரிஸ்வான், இமாம் உல்-ஹக், சல்மான் ஆஹா உட்பட 7 முக்கிய வீரர்கள் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுத் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அணியின் ஓய்வறை விவகாரங்கள் மற்றும் ரகசியத் தகவல்கள் ஊடகங்களுக்குக் கசிந்தது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில், தேசிய சைபர் கிரைம் முகமை அதிகாரிகள், நீக்கப்பட்ட வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் இமாம் உல்-ஹக் ஆகியோரிடம் சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இச்சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.