சித்தி மகள் மீது தீராக் காதல்... இடையூறாக இருந்த 2 வயது குழந்தையைக் கொலைச் செய்த கொடூரம்!

சகோதரி முறையுள்ள சித்தி மகள் மீது தீராத காதலில் இருந்து வந்த சகோதரன், திருமணமாகி 2 வயது மகன் உள்ள சித்தி மகளிடம் மீண்டும் தனது காதலைக் கூறி ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதில், அந்த பெண் தொடர்ந்து மறுத்து வந்ததால், குழந்தை இடையூறாக இருப்பதாக நினைத்து, 2 வயது மகனைக் கிணற்றில் வீசி கொலைச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம், பலராமபுரத்தில் வசிக்கும் ஸ்ரீது மற்றும் ஸ்ரீஜித் தம்பதியினருக்கு, தேவேந்து என்ற 2 வயது மகன் உள்ளார். இரு தினங்களுக்கு முன், வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதால், பெற்றோர் வீட்டில் எல்லா இடங்களிலும் தேடினர். குழந்தை எங்கும் காணாததால், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், குழந்தையின் உடல் அவர்களது வீட்டில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்து கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் குழந்தையின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரது பெற்றோர் மற்றும் மாமாவிடம் விசாரித்து வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் ஹரிகுமார் என்பவர் தனது சொந்த சகோதரி ஸ்ரீதுவை காதலித்து வந்துள்ளார். ஸ்ரீதுவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு வயது மகன் உள்ளார். இருப்பினும், ஹரிகுமார் தனது சகோதரி மீதான காதலை கைவிடவில்லை. இந்நிலையில் தனது சகோதரியின் குழந்தை தனது காதலுக்கு தடையாக இருப்பதாக நினைத்து ஹரிகுமார், குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுள்ளார்.
கிணற்றில் விழுந்த குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது ஹரிகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!