இன்ஸ்டாகிராம் காதல்.. 17 வயது மாணவியைக் கடத்தி பாலியல் அத்துமீறல் - சேலத்தில் அதிர்ச்சி!

 
பாலியல் பலாத்காரம் வன்கொடுமை சிறுமி

சேலத்தைச் சேர்ந்த சிறுமியைச் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆந்திராவைச் சேர்ந்த வாலிபரைப் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் தளம் வழியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, கஜேந்திரன் அவரைப் பெங்களூருவுக்குக் கடத்திச் சென்றுள்ளார். அங்குக் கூட்டிச் செல்லப்பட்ட சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாலியல் பலாத்காரம் சிறுமி

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், பெங்களூருவில் முகாமிட்டுச் சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். கடத்தல் மற்றும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கஜேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.