'பைசன்' படப்பிடிப்பில் காதலா? துருவ் விக்ரமை செருப்பால் அடித்தாரா நடிகை அனுபமா பரமேஸ்வரன்?!

 
அனுபமா பரமேஸ்வரன்

சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் நடிகர் துருவ் விக்ரம் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இடையே திடீர் தகராறு ஏற்பட்டதாக பரவி வரும் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்துள்ள 'பைசன்' திரைப்படத்தின் பணிகளுக்கு இடையே இருவரும் பொது இடம் ஒன்றில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சந்தித்துக் கொண்ட இருவருக்கும் இடையே திடீரெனக் கடுமையான காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது ஆத்திரமடைந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், நடிகர் துருவ் விக்ரமைச் செருப்பால் அடித்ததாக இணையத்தில் அதிர்ச்சித் தகவல்கள் பரவி வருகின்றன.

அனுபமா பரமேஸ்வரன்

'பைசன்' படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், தற்போது அந்த உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே இந்த மோதல் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளத் தொடர்பு துண்டிப்பு: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் துருவ் விக்ரமை 'அன்ஃபாலோ' செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.