லவ் டார்ச்சர்.. பெண்ணை தாக்கிய ஜிம் பயிற்சியாளரை கைது செய்த போலீசார்!

 
சூர்யா

சென்னை கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் உள்ள ஒரு ஜிம்மிற்கு 30 வயது பெண் ஒருவர் உடல் எடையை குறைக்க சென்றார். சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் சூர்யா, அங்கு அந்தப் பெண்ணுக்கு பயிற்சி அளித்து வந்தார். இதற்கு பின், இருவரும் நண்பர்களாகிவிட்டனர்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

இந்த நிலையில், சூர்யாவின் நடத்தை பிடிக்காத ஜிம் நிர்வாகம் கடந்த நவம்பர் மாதம் அவரை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சூர்யாவின் தகாத நடத்தை காரணமாக அந்தப் பெண் அவருடன் பேசுவதை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சூர்யா, 13 ஆம் தேதி மாலை ஜிம்மிற்குச் சென்று, அந்தப் பெண்ணை கீழே வரவழைத்து தாக்கினார்.

மீண்டும் தன்னிடம் பேசாவிட்டால், தனது புகைப்படங்களை வெளியிட்டு, தனது குடும்பத்தினரிடம் தெரிவிப்பேன் என்று சூர்யா அந்தப் பெண்ணை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், ஒரு பெண்ணைத் தாக்கியது உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web