லிவிங் டூ கெதர்... மகன் பிறந்ததும் விவாகரத்து... இங்கிலாந்து நடிகருடன் நடிகை எமிக்கு திருமண நிச்சயதார்த்தம்!

 
எமி ஜாக்சன்

நடிகர் ஆர்யா நடித்த மதுராசபட்டினம் படத்தில் துரையம்மாவாக நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தனது முதல் படத்திலேயே இளைஞர்களின் இதயங்களைக் வென்றார்.இதன்பிறகு தாண்டவம், தெறி, ரஜினியின் 2.0, ஷங்கரின் ஐ போன்ற படங்களில் நடித்தார்.தமிழில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

எமி ஜாக்சன் கடந்த 2015ஆம் ஆண்டு ஜார்ஜை காதலித்து வருகிறார்.திருமணம் செய்யாமல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறகு இவர்களது காதலில் முறிவு ஏற்பட்டு, இருவரும் பிரிந்தனர். குழந்தையுடன் தனியாக வசித்து வந்த எமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்து நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவருக்கும் தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 21ம் தேதி எமி ஜாக்சனுக்கும், அவரது காதலர் எட் வெஸ்ட்விக்க்கும் லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண நிச்சயம் நடந்தது. காதலனுடன் வந்த எமி ஜாக்சன் தனது காதலர் எட் வெஸ்ட்வேக்கு மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். பின்னர் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு ஆடம்பர விருந்து அளித்தனர்.

இந்த காதல் ஜோடியின் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எமி ஜாக்சன் நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் வாழ்த்துகளுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web