வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்தது - வானிலை மையம் எச்சரிக்கை!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்களே உஷார்..! புதிய காற்றழுத்த தாழ்வு..! 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிக கன முதல் அதி கன மழை எச்சரிக்கை

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் காற்றழுத்த மாறுபாடு காரணமாகக் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் பலத்த காற்றும், ஆங்காங்கே கனமழையும் பெய்யக்கூடும். கடல் பகுதியில் காற்று அதிவேகமாக வீசக்கூடும் என்பதால், ஆழ்கடல் பகுதிகளுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.