ஹோட்டல் 10-வது மாடியில் இருந்து விழுந்து காதலி பலி... சிறையில் காதலன் மர்ம மரணம்!

 
உபி

 

உத்தரபிரதேசத்தில், ஹோட்டலின் 10-வது மாடியில் இருந்து விழுந்து காதலி உயிரிழந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர், சிறை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Lucknow hotel death case: Man accused of pushing girlfriend off 10th floor dies by suicide in jail | Lucknow News - The Times of India

ஹோட்டலில் உயிரிழந்த இளம்பெண்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் உள்ள ஓமாக்ஸ் நியூ ஹோட்டலில் கடந்த அக்டோபர் மாதம் சம்ரீன் (24) என்ற இளம்பெண் 10-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது காதலன் அவனிஷ் ஜெய்ஸ்வால் கைது செய்யப்பட்டார். சம்ரீனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அவனிஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Lucknow Jail: Man Accused in Girlfriend's Hotel-Fall Death Commits Suicide

சிறையில் காதலன் மர்ம மரணம்

இதையடுத்து நீதிமன்றக் காவலில் லக்னோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவனிஷ் ஜெய்ஸ்வால், தற்போது சிறை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெளிவான தகவல் வெளியாகவில்லை. காதலி உயிரிழந்த வழக்கில் கைதானவர் சிறையிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.