ரூ.4,000 பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் எஸ்கேப்! காரில் தொங்கிய ஊழியர் படுகாயம்... வைரல் வீடியோ
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், பெட்ரோல் நிரப்பியதற்கான பணத்தைச் செலுத்தாமல் காரில் தப்பிச் சென்றவர்களைத் தடுக்க முயன்ற பெட்ரோல் நிலைய ஊழியர் படுகாயமடைந்தார்.
A shocking incident was reported from Lucknow, where a petrol pump employee was allegedly dragged along a highway for nearly a kilometre by car occupants who fled without paying for fuel The employee reportedly tried to stop the vehicle but was dragged before being abandoned on the road He was later rushed to a private hospital for treatment. The entire incident was captured on CCTV, and further details are awaited #LucknowNews #CCTVFootage #PetrolPumpIncident #UttarPradeshNews #CrimeNews
— News18 (@CNNnews18) November 8, 2026
லக்னோவின் கோசாய்கஞ்ச் பகுதியில் உள்ள ஜி.எஸ். பெட்ரோல் நிலையத்துக்கு, நேற்று அதிகாலை 4.19 மணியளவில் கருப்பு நிற கார் ஒன்று வந்துள்ளது. காரில் இருந்தவர்கள் ரூ.4,000-க்கு பெட்ரோல் நிரப்புமாறு கேட்டுள்ளனர். அதன்படி ஊழியர் சச்சின் குமார் பெட்ரோல் நிரப்பியதும், பணம் வசூலிக்க காரின் அருகே சென்றுள்ளார்.
அப்போது ஓட்டுநர் திடீரென காரை வேகமாக இயக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சச்சின் குமார், காரின் கதவைப் பிடித்து நிறுத்த முயன்றார். ஆனால் கார் நிற்காமல் சென்றதால், அவர் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சாலையில் விழுந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து பெட்ரோல் நிலைய மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
