நடுரோட்டில் மயங்கிய முதியவர்... CPR செய்து உயிரைக் காப்பாற்றிய காவலர்!”

 
சிபிஆர்எப்

 

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், நடுரோட்டில் திடீரென மயங்கி விழுந்த முதியவருக்கு உடனடியாக சிபிஆர் (CPR) முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

துரிதமாகச் செயல்பட்ட காவலர்

லக்னோவில் உள்ள ரஹீம் நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருபவர் சந்தீப் யாதவ். கடந்த ஞாயிற்றுக்கிழமை மஹாநகர் சந்திப்புப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்ட சந்தீப் யாதவ் உடனடியாக அவருக்கு இதய நுரையீரல் புத்துயிரூட்டல் (CPR) முதலுதவி அளித்தார். இதையடுத்து முதியவருக்கு நினைவு திரும்பியதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Constable saves elderly man with CPR, earned police chief's commendation | Lucknow News - The Times of India

பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையர்

முதியவரின் உயிரைக் காப்பாற்றிய காவலர் சந்தீப் யாதவின் செயல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவரது துரிதமான நடவடிக்கையைப் பாராட்டிய லக்னோ காவல் ஆணையர் தருண் கபா, அவரை நேரில் அழைத்துப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். அவசர நேரத்தில் சரியான முதலுதவி அளிப்பது ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.