வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 மாணவர்கள் பரிதாப பலி, பலர் மாயம்... பெரும் பரபரப்பு!

 
லக்னோ

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பூர்ணியா என்ற பரபரப்பான பகுதியில், அரசுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் ஒரு தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் இந்த மையமானது, அங்குள்ள ஒரு பிரம்மாண்ட வணிக வளாகக் கட்டிடத்தின் மேல் தளத்தில் வாடகைக்கு இயங்கி வந்துள்ளது.  இன்று  அந்த வணிக வளாகத்தில் திடீரென ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் மின் கசிவு காரணமாக மெதுவாகப் பற்றிய தீயானது, சில நிமிடங்களிலேயே மளமளவெனக் கட்டிடத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும்   பரவி நச்சுப் புகை மண்டலமாக மாறியுள்ளது. தங்களது அறைகளுக்குள் தீ மற்றும் புகை சூழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயிற்சி மைய மாணவர்கள், என்ன செய்வது என்று தெரியாமல் அலறியபடி மாடியில் இருந்து கீழே குதித்துத் தங்களது உயிரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த உள்ளூர் பொதுமக்கள் உடனடியாகக் காவல் துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் அவசர விபரம் தெரிவித்துவிட்டு மீட்புப் பணியில் களம் இறங்கினர்.

சம்பவ இடத்திற்கு அதிநவீன வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடிக் கட்டிடத்தில் பற்றிய தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த கோர விபத்தில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனப் போலிசார் அஞ்சப்படுகிறது.