இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும்... வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்க!
இன்று துவாதசி திதி மற்றும் அசுவினி நட்சத்திரம் கூடிவரும் நன்னாள். இன்றைய பொதுவான அறிவுரை: சந்திராஷ்டம ராசிக்காரர்கள் (இன்று கன்னி ராசி) புதிய காரியங்களைத் தொடங்குவதையும், தேவையற்ற வாக்குவாதங்களையும் தவிர்த்து, பொறுமையுடன் செயல்படுவது நன்மையளிக்கும்.
மேஷம்
இன்று உங்களுக்குச் சுறுசுறுப்பான நாளாக அமையும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன காரியங்கள் இன்று சாதகமாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். பிள்ளைகளின் வழியில் நல்ல செய்தி தேடி வரும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
ரிஷபம்
நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உறவினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கக்கூடும். வரவு-செலவில் திட்டமிடல் அவசியம். கண் அல்லது அஜீரணம் சார்ந்த உபாதைகள் தோன்றி மறையும்.
மிதுனம்
இன்று உங்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும் யோகமான நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
புதிய முதலீடுகள் செய்ய உகந்த நாள். எதிர்பார்த்த லாபம் கைக்கு வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவது குறித்துப் பேசுவீர்கள். சுபச் செய்திகள் வந்து சேரும். மனமும் உடலும் உற்சாகமாக இருக்கும்.

கடகம்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் இன்று அலுவலகத்தில் கிடைக்கும். புதிய உத்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். அரசு வழியில் ஆதாயம் உண்டு. பெற்றோரின் ஆதரவு கிட்டும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பழைய பாதிப்புகள் நீங்கி உடல்நிலை சீராகும்.
சிம்மம்
ஆன்மீக எண்ணங்களும், புதிய சிந்தனைகளும் தோன்றும் நாள். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வணிகத்தில் புதிய திருப்பம் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உறவினர்களிடம் மதிப்பு கூடும். சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள்.
கன்னி
இன்று செலவுகள் அதிகரிக்கும் என்பதால் திட்டமிட்டுச் செயல்படவும். தூரத்துப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பெரிய முதலீடுகளை இன்று தவிர்ப்பது உசிதம். மற்றவர்களிடம் பண விஷயத்தில் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். அலட்சியம் காட்டாமல் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.
துலாம்
மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த நாளாக அமையப் போகிறது. புதிய நண்பர்களின் சேர்க்கை உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் அமையும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். மாலை நேரத்தில் குடும்பத்துடன் வெளியில் சென்று மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
எதிர்ப்புகள் விலகி நற்பெயர் எடுக்கும் நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கடன் தொல்லைகள் ஓரளவுக்குக் குறையும். சகோதர வழியில் உதவி கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பழைய மருத்துவச் செலவுகள் குறையும்.
தனுசு
புதிய திட்டங்களைத் தீட்டும் நாளாக அமையும். பிள்ளைகளின் கல்வி அல்லது எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும். உறவினர்களிடையே உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மன அமைதிக்காக தியானம் அல்லது பிரார்த்தனை செய்வது நல்லது.
மகரம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களைச் சாதிக்கும் நாள். சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகள் கூடி வரும்.
உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம். கடின உழைப்பால் இலக்குகளை எட்டுவீர்கள். தாய் வழியில் ஆதரவும் நன்மைகளும் உண்டாகும். புதிய ஆடம்பப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. சிறிய அளவிலான அசதி தோன்றி மறையும்.
கும்பம்
தைரியமும் துணிச்சலும் கூடும் நாள். உங்களின் நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேற வாய்ப்புள்ளது. குறுகிய தூரப் பயணங்களால் வணிகத்தில் லாபம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். அண்டை வீட்டாருடன் இருந்த சுமுகமற்ற நிலை மாறும். இளைய சகோதரர்கள் ஆதரவாக நிற்பார்கள். சுறுசுறுப்பும் மனத்திடமும் கூடும்.
மீனம்
பணப்புழக்கம் அதிகரித்து சேமிப்பு உயரும் நன்னாள். கொடுத்த கடன்கள் வசூலாகும் வாய்ப்புகள் உள்ளன. பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். எதிர்பார்த்த பண வரவு தடையின்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பற்கள் அல்லது தொண்டை சார்ந்த உபாதைகளில் கவனம் தேவை.
