இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள்... பதவி உயர்வு, வாகன யோகம் உண்டு!

 
ஜோதிடம் ராசி ராசிபலன்கள் நேரம் யோகம் அதிர்ஷ்டம் ஜோதிடம் ராசி ராசிபலன்கள் நேரம் யோகம் அதிர்ஷ்டம்

மேஷம் : தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யத் திட்டமிடுவீர்கள். எலெக்ஷன் ஃபீவர் போல உங்களுக்கும் வேலையில் சுறுசுறுப்பு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை.

ரிஷபம்  எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டிய நாள் இது. நண்பர்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்: இன்று உங்களுக்குப் பொறுமை ரொம்ப முக்கியம் பாஸ்! வீணான விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாகும். ஆன்மீகப் பயணங்களுக்கான வாய்ப்புகள் அமையும்.

கடகம்: தொழிலில் லாபம் தரும் செய்திகள் வந்து சேரும். கணவன் - மனைவிக்குள் புரிதல் கூடும். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொதுக் காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ராசி

சிம்மம்: சிங்கக் குட்டி போல நிமிர்ந்து நிற்பீர்கள்! தொட்டதெல்லாம் துலங்கும் நாள் இது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சொத்து விவகாரங்கள் ஒரு முடிவுக்கு வரும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும்.

கன்னி: திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். செலவுகளைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது.

துலாம்: நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். பேச்சில் கனிவு இருந்தால் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும், சேமிப்பதில் சிரமம் இருக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் கூடும்.

விருச்சிகம் : உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேருவார்கள். அரசியல் தொடர்புடையவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தந்தையின் உடல்நலத்தில் அக்கறை தேவை.

லட்சுமி நாராயண யோகம் ராசி ராசிபலன் அதிர்ஷ்டம் ஜோதிடம் யோகம்

தனுசு : இன்று உங்களுக்கு 'ஜாக்பாட்' நாள்! எதிர்பாராத அதிர்ஷ்டம் கதவைத் தட்டும். புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சுபச் செய்திகள் வந்து சேரும்.

மகரம் : உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது பணி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் திட்டமிடப்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்: இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்கத் திட்டமிட்டுச் செயல்படுங்கள். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதைத் தவிர்க்கவும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

மீனம்: மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். அரசாங்க ரீதியான உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.