ஏஐ முதலீடுகளால் அதிர்ஷ்டம்... அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதல் இடத்தைப் பிடித்த ஜாங் யிமிங்!
Sep 18, 2026, 20:30 IST
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் அடிப்படையில், 'பைட் டான்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் ஜாங் யிமிங் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக முன்னேறியுள்ளார்.
பிரபல சமூக வலைதள நிறுவனமான 'பைட் டான்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் ஜாங் யிமிங், தற்போது சுமார் 105 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் ஆசியாவின் முதல் இடத்தை அடைந்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீட்டாளர்களின் ஆர்வம் தாறுமாறாக அதிகரித்ததாலும், அதன் காரணமாகப் 'பைட் டான்ஸ்' நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு உயர்ந்ததாலும் இவரது செல்வம் பன்மடங்கு பெருகியது.
இந்த திடீர் சொத்து உயர்வு காரணமாக, இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஜாங் யிமிங் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார்.
