இன்று 100 ஆண்டுகளுக்கு பிறகு ஹோலியில் சந்திரகிரகணம்... வெறும் கண்களால் பார்க்கலாமா?

 
சந்திரகிரகணம்

 இன்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இன்றைய தினம்  இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணமும் சேர்ந்தே வருகிறது.  இந்தியா போன்ற பாரம்பரிய கலாச்சாரங்கள் நிறைந்த நாடுகளில் கிரகணங்கள் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, இன்று ஹோலி பண்டிகையும், பங்குனி உத்தரமும் கொண்டாடப்பட்டு வரும் நாளில் கிரகணம் வருவது குறித்த பல்வேறு தகவல்கள் விளக்கங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  

கிரகணம்

சுமார் 100 ஆண்டுகள் கழித்து ஹோலி நாளில் கிரகணம் நிகழ்ந்துள்ளது. இன்று உணவு எடுத்துக் கொள்ளுதல் தொடங்கி, வெளியே செல்லுதல் வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.  ஒவ்வொரு ஆண்டும் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணங்கள் ஏற்படும் நிலையில்  இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது படுவதை தான்  சந்திர கிரகணம் என்கிறோம்.  இதில் முழு சந்திர கிரகணம், பகுதி நேர சந்திர கிரகணம் என இரண்டு வகைகள் உண்டு. இன்று ஏற்படப்போவது பகுதி நேர சந்திர கிரகணம் தான். அதாவது பூமியின் நிழல் முழுமையாக சந்திரன் மீது விழாமல், பூமியின் நிழலின் வெளிப்புற விளிம்புகள் மட்டும் சந்திரன் மீது விழுவதை தான் பகுதி நேர சந்திரகிரகணம் என்கிறோம். இதனால் நிலவு முழுமையாக மறையாது.

அடேங்கப்பா!! மிஸ் பண்ணாதீங்க!! வரும் வெள்ளிகிழமை 5  மணி நேரம் நீடிக்குமாம்!! இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்!!

இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் காணமுடியாது. ஆனால் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காணலாம் என்கின்றனர் வானவியல் அறிஞர்கள்.  இந்த கிரகணம் இந்திய நேரப்படி காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 03:02 வரை 4 மணி 36 நிமிடங்கள் வரை நீடிக்கிறது.  இந்தியாவில் பகல் பொழுது இருப்பதால் இதனை பார்க்க முடியாது.   சூரிய கிரகணத்தைதான் வெறும் கண்களில் பார்க்கக் கூடாது   சந்திர கிரகணத்தை  வெறும் கண்களால் பார்க்கலாம் என  விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்


 

From around the web