உருக்கமான கடிதம்... நிலத்தை விற்றுப் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிய தந்தை, மனைவியுடன் தற்கொலை!

 
லூதியானா லூதியானா

லூதியானாவின் பாமல் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது குர்மீத் சிங் மற்றும் அவரது மனைவி நரிந்தர் கவுர் ஆகியோர், தங்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூத்த மகன் மற்றும் மகளைக் கனடா நாட்டுக்கு அனுப்பத் தனது நிலத்தை விற்ற குர்மீத் சிங், கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துள்ளார். மகிழ்ச்சியான எதிர்காலத்திற்காகப் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த போதிலும், தங்களது வறுமை நீங்கவில்லை என்ற வேதனையில் இந்தத் தம்பதியினர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

பள்ளி மானவி தற்கொலை

தற்கொலைக்கு முன்பு அவர்கள் எழுதிய இரண்டு பக்கக் கடிதத்தில், "வறுமையில் பிறந்தோம், வறுமையிலேயே சாகிறோம்" என்று மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர். தங்களது இந்த முடிவுக்குப் பிள்ளைகள் காரணமல்ல என்பதால், அவர்களைத் துன்புறுத்த வேண்டாம் என்றும் அவர்கள் அந்தச் சூழலிலும் கேட்டுக்கொண்டுள்ளனர். மன அழுத்தத்தில் இருந்த மனைவியின் சிகிச்சைக்காகப் பெருமளவு பணத்தைச் செலவழித்து வந்த குர்மீத் சிங், கடன் சுமை மற்றும் மன வேதனையாலேயே இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கருதப்படுகிறது.

தற்கொலை

ஆனால், அவர்களது இளைய மகன் தனது உடன்பிறப்புகள் அனைவரும் பெற்றோருக்குப் பண உதவி செய்து வந்ததாகவும், விரைவில் அவர்களைக் கனடாவிற்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மனைவியின் உடல்நலக் குறைவால் மிகுந்த மனவேதனையில் இருந்த குர்மீத் சிங், அந்தத் துயரம் தாங்காமலேயே மனைவியுடன் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். வறுமையும் மன அழுத்தமும் ஒரு அழகான குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.