சொகுசு பேருந்து லாரி மீது மோதி கோர விபத்து... சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி, 10 பேர் படுகாயம்!

 
விபத்து

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி பால்பண்ணை அருகே உள்ள மேம்பாலத்தில் சென்னையில் இருந்து கம்பம் நோக்கி 34 பயணிகளுடன் தனியார்  சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தர்மபுரியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி செங்கல் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல பேருந்து முயற்சித்த போது, எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் பயங்கர வேகத்தில் பேருந்து மோதி விபத்துக்குள்ளனாது.  இதில் பேருந்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது.இந்த விபத்தில், சொகுசு பேருந்து ஓட்டுநர், பேருந்தில் இருந்த பெண் பயணி ஒருவர் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

விபத்து

விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த  கோட்டை காவல் நிலைய போலீசார், உயிரிழந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பெண் பயணியின் உடல்களை கைப்பற்றி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

வணிவரித்துறை  உதவியாளர்  தற்கொலை

இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. விபத்துக்குள்ளான பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போலீசார்  ஒரு மணி நேரத்திற்கு பின் போக்குவரத்தை சீர் செய்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web