ஜெயிலில் சொகுசு வசதிகள்... வாரத்தில் 3 நாட்கள் சிக்கன்... அன்பில் மகேஷுக்கு என்னென்ன வசதிகள் தெரியுமா?!
சுமார் ₹400 கோடி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை புழல் மத்திய சிறையில் ‘ஏ’ வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
புழல் சிறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கு வழங்கப்படும் பிரத்யேக வசதிகள் என்னென்ன தெரியுமா? வழக்கமான சிறை உணவோடு கூடுதலாக சப்பாத்தி மற்றும் வாரத்தில் 3 நாட்கள் சிக்கன் வழங்கப்படும். சாதாரண கைதிகளை விட அதிக அளவில் பால் மற்றும் தேநீர் வழங்கப்படும். தனி அறை, கட்டில், மெத்தை, மின்விசிறி, நாற்காலி மற்றும் மேஜை போன்ற சிறப்பு வசதிகள் அளிக்கப்படும். நாளிதழ்கள், தொலைக்காட்சி வசதி மற்றும் கொசுவலை போன்றவை வழங்கப்படும்.

சிறைக் கண்காணிப்பாளரின் முன்அனுமதியுடன் வெளியிலிருந்து ஹாட் பாக்ஸ் மற்றும் உணவுக் தட்டுகளைப் பயன்படுத்த அனுமதி உண்டு. தனிநபர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிரத்யேக மருத்துவப் பரிசோதனை வசதிகளும் செய்து தரப்படும். முன்னாள் அமைச்சர் என்ற அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்படி இவருக்கு இத்தகைய சிறப்பறை வசதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
