மு.வீரபாண்டியன் மருத்துவமனையில் அனுமதி - அமைச்சர்கள் நேரில் நலம் விசாரிப்பு!

 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் லேசான உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மு.வீரபாண்டியன் தற்போது நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.வீரபாண்டியனைத் தமிழக அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்துத் தேவையான உதவிகள் குறித்துக் கேட்டறிந்தனர்.