மாதவரத்தில் பயங்கரம்! கல்லூரி மாணவர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி

 
லாரிசக்கரம்

 

சென்னை மாதவரம் அருகே டிப்பர் லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

சென்னை மணலி பெரியதோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜியின் மகன் ஜனா (20), சென்னையில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தேர்வு எழுதுவதற்காக நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். மாதவரம் மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே சென்றபோது, அதே திசையில் வந்த டிப்பர் லாரி அவரது பைக் மீது மோதியது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜனா, லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.