இடைத்தேர்தல் வேட்புமனு பரிசீலனை இன்று! 99 மனுக்களின் நிலை என்ன?

 
இடைத் தேர்தல்

 மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செப்.17) நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் சேர்த்து 100 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அவற்றில் தகுதியான மனுக்கள் இறுதி செய்யப்பட உள்ளன. மதுராந்தகம் தொகுதியில் 49 வேட்புமனுக்களும், தாராபுரம் தொகுதியில் 51 வேட்புமனுக்களும் என மொத்தம் 100 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இன்று நடைபெறும் பரிசீலனையில் வேட்புமனுக்களில் உள்ள விவரங்கள் மற்றும் தேர்தல் விதிகளின்படி அவற்றின் தகுதி ஆய்வு செய்யப்படுகிறது.

 இடைத் தேர்தல்

வேட்புமனு பரிசீலனை முடிந்த பிறகு, வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் வழங்கப்படுகிறது.செப்.19-ம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் என தேர்தல் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இடைத் தேர்தல்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை இந்த இரு தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளன.வேட்புமனு பரிசீலனை மற்றும் திரும்பப் பெறும் நடைமுறைகள் நிறைவடைந்ததும், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிரமடையும்.