கெட்டுப்போன நூடுல்ஸ் சாப்பிட்ட 118 குழந்தைகள் உட்பட 130 பேருக்கு வாந்தி, மயக்கம்... திருவிழாவில் பரபரப்பு!

 
நூடுல்ஸ்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஹிரி கிராம திருவிழாவில் விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன நூடுல்ஸைச் சாப்பிட்ட 118 குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்களுக்கு திடீரென வயிற்று வலி மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவு ஏற்பட்ட அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 73 குழந்தைகள் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பினர்.

நூடுல்ஸ்

எஞ்சிய 45 குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்கள் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்குத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருவிழா கடைகளில் விற்கப்பட்ட உணவுப் பொருட்களின் தரம் குறித்துச் சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.