ரூ.100 கோடி அவதூறு வழக்கு - தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில், அவர் தனது பதிலைச் சமர்ப்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்ட விவகாரத்துடன் தன் பெயரைக் தொடர்புபடுத்தி அவதூறான செய்தி வெளியிட்டதாகக் கூறி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத்குமார் மற்றும் மீடியா நிறுவனங்கள் மீது கிரிக்கெட் வீரர் தோனி ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை நீதிபதி முன்பு நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ பதிவு செய்ய வேண்டும் என்று கோரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி தரப்பு உரிய பதிலை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
