பெரம்பூர் தொகுதி வெற்றிக்கு எதிரான வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

 
தமிழகம் தேர்தல் விஜய்

 

கட்டுரை: பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதற்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய அவரது மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுமார் 53 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஜய்க்கு எதிராக, சொத்து விவரங்கள் தொடர்பான முரண்பாடுகள் மற்றும் மறைப்புக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொகுதி வாக்காளர் தினேஷ் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

தலைமை செயலகம் விஜய்

வேட்புமனுவில் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்றும், யூகங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் கூறி வழக்கை ஆரம்ப நிலையிலேயே ரத்து செய்யக் கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், சொத்து விவரங்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டனவா என்பதை முழுமையான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில்தான் தீர்மானிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

பெரம்பூர் விஜய் எம்.எல்.ஏ.அலுவலகம்

வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க அடிப்படைத் தகவல்கள் இல்லை எனக் கூற முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்து தேர்தல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற வழிவகை செய்தார்.