புதிய கலைக் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!

 
சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்க விரும்பும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்விப் பிரிவுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுத் தொடக்கத்தை பல்கலைக்கழகப் பதிவாளர் ரீட்டா ஜான் அறிவித்துள்ளார்.

பொறியியல் கல்லூரி

2027-28-ம் கல்வியாண்டுக்கான புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கவும், முதுநிலை வணிக மேலாண்மை (MBA) மற்றும் கணினி பயன்பாடு (MCA) பாடப்பிரிவுகள் மட்டுமே நடத்தும் மேலாண்மை நிறுவனங்களுக்கும், தற்போது இயங்கிவரும் கல்லூரிகளில் புதிய இணைப்புப் பாடங்கள் மற்றும் கூடுதல் பிரிவுகள் தொடங்குவதற்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலேஜ் கல்லூரி மாணவிகள்

தகுதியுள்ள கல்வி நிறுவனங்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.unom.ac.in மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அபராதம் இல்லாமல் உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: நவம்பர் 2 அபராதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 10