மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஜனவரி முதல் செயல்படத் தொடங்கும்! 150 படுக்கைகளுடன் தொடக்க ஏற்பாடு
Oct 20, 2026, 16:50 IST
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வரும் ஜனவரி மாதம் முதல் 150 படுக்கைகளுடன் முதற்கட்டமாகச் செயல்படத் தொடங்கும் என்று அதிமுக எம்.பி. இன்பதுரை தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் விர் சிங் நேகி, இன்பதுரையை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார். அப்போது, மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை குறித்து இயக்குநர் விரிவாக விளக்கியதாக இன்பதுரை குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையின் முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்து, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
