மதுரை காவல் நிலைய மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

 
செக்கானூரணி

 

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த பாலசுப்பிரமணியன் மரணம் தொடர்பான வழக்கு, தற்போது சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மதுரை செக்கானூரணி காவல் நிலையம் லாக்-அப் டெத்

தான் ஓட்டி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததாகப் புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்திற்குச் சென்ற பாலசுப்பிரமணியன், விசாரணைக்காக அங்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இந்நிலையில், காவல் நிலையக் கழிவறையில் அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மதுரை செக்கானூரணி காவல் நிலையம்

காவல் நிலையத்திலேயே அவர் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பாலசுப்பிரமணியனின் மரணத்திற்கான சூழ்நிலைகள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருப்பது, சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.