தமிழகம் முழுவதும் புதிய டாஸ்மாக் கடைகளுக்கு தடை! உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி மாவட்டம் நவகிநத்துப்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி மணிகண்டன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் மதுபானக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக கடைகளைத் திறக்க வேண்டிய அவசியம் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், பொதுநலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கையும் முடித்து வைத்தனர்.இந்த உத்தரவால் தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது
