மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 3, 2026, 11:33 IST
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா தொடர்பான வழக்கில், குடமுழுக்கு கல்வெட்டில் அறங்காவலர் குழுவினரின் பெயர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி அவர்கள் அறங்காவலர் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவின் அழைப்பிதழில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் முறையாக இடம்பெறவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, வரவிருக்கும் குடமுழுக்கு விழாவின் கல்வெட்டுகளில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்களை உரிய முறையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
