பருவமழை ஆலோசனைக் கூட்டத்தில் தூங்கி வழிந்த அமைச்சர் ஆனந்த் !

 
ஆனந்த்

 

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மதுரையில் அரசு நிர்வாகத்தின் சார்பில் மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த், மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தார்.

இந்தக் கூட்டத்தின்போது அமைச்சர் ஆனந்த் மேடையில் அமர்ந்திருந்த நிலையில், அவர் தூக்கக் கலக்கத்துடன் இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பதிவான இந்தக் காட்சிகள் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளன.