மதுரையில் பரபரப்பு... தவெக நிர்வாகி வெட்டிக் கொலை... போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வீடு திரும்பிய போது விபரீதம்!

 
தவெக

 

மதுரை பரவை மேலரதவீதி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (24), தவெக பேரூர் நிர்வாகியாகவும் மினி வேன் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் என்பவரின் மகள் தாரணியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

ஆம்புலன்ஸ்

மதுரை பனையூரில் உள்ள சொத்து தொடர்பாக மாமனார் செந்தில்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. அந்த இடத்தில் மரம் வெட்டிய விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், மாமனாரின் சகோதரர் சிவக்குமாரை சந்தோஷ் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரில் கைதாகிச் சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் சந்தோஷ் வெளியே வந்துள்ளார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்நிலையில், நேற்று சிலைமான் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு பரவையில் உள்ள வீட்டிற்குச் சந்தோஷ் வந்துள்ளார். மதிய நேரத்தில் வீட்டின் கதவை உடைத்துப் புகுந்த மர்மக் கும்பல், தப்பி ஓட முயன்ற சந்தோஷை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது.இந்தச் சம்பவம் குறித்துச் சமயநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்