தனிஷ்க் நகைக்கடையில் அதிகாலை கொள்ளை… மதுரையில் பரபரப்பு!

 
தனிஷ்க்

 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் அடமானம் வைக்கப்பட்ட சுமார் 500 சவரன் தங்க நகைகள் மாயமானதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரபெருமாள்புரத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திய சிலருக்கு அவர்களது நகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சங்க நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும், சங்கச் செயலாளர் மணிகண்டன் நகைகளைத் திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சங்க அலுவலகம் முன்பு போராட்டம்

இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், பெண்கள் உட்பட பலர் சங்க அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது அடமான நகைகளை மீட்டுத் தருவதுடன், புகாருக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே புகார் அளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 500 சவரன் நகைகள் மாயமானதாகக் கூறப்படும் புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.