மதுராந்தகம் இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர் ஜானகிராமனை ஆதரித்து சீமான் தீவிர பிரச்சாரம்!

 
சீமான்

தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்றும் நாளையும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜானகிராமனுக்கு ஆதரவாகச் சீமான் இன்று தனது பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். புழுதிவாக்கம், எல்.எண்டத்தூர் மற்றும் மதுராந்தகம் தேரடித் தெரு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

முதல் நாள் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, நாளையும் தனது சுற்றுப்பயணத்தைத் தொடரும் சீமான், படாளம், மேலவளம் பேட்டை கூட்டுச்சாலை மற்றும் அச்சிறுப்பாக்கம் சந்தைப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரக் கூட்டங்களில் உரையாற்றி வாக்குகள் சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

மதுராந்தகம் தொகுதியில் ஏற்கனவே முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் களமிறங்கியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்தப் பிரச்சாரப் பயணம் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தொகுதியில் தேர்தல் களத்தை மேலும் அனல் பறக்க வைத்துள்ளது.