மகளிர் உரிமைத்தொகை எப்போது வரும்? நவம்பர் 15ம் தேதி வரவு எனத் தகவல்!

 
விஜய்

 

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களுக்கு, நவம்பர் மாதத்திற்கான ரூ.1,000 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர் 15ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் தொகை வரவு வைக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகளிர் சுய உதவிக்குழு உதவித்தொகை தமிழக அரசு விஜய்

தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, நவம்பர் மாத உரிமைத்தொகையை முன்கூட்டியே வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், இதுகுறித்து அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதுடன், முன்கூட்டியே பணம் வழங்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

தலைமைச் செயலகம் லஞ்சம் நிதியுதவி தொகை பணம்

பொதுவாக இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான தொகை வழக்கமான நடைமுறையின்படி நவம்பர் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.எனவே, தீபாவளிக்கு முன்பே பணம் கிடைக்கும் என்ற தகவலை நம்பி காத்திருந்த பயனாளிகள், தற்போது நவம்பர் 15ஆம் தேதியை எதிர்பார்த்துள்ளனர்.