சூப்பர்... விண்வெளியில் மகா கும்பமேளா... நாசா வீரர் புகைப்படங்கள் வெளியீடு!

 
நாசா


உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில்  ஜனவரி 13-ஆம் தேதிமுதல் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த  மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள  உலகம் முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான   பக்தா்கள் தினமும் வந்து புனித நீராடி செல்கின்றனர்.

 இந்நிலையில் , விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாசா விண்வெளி வீரரான டான் பெட்டிட் பதிவிட்டுள்ளார். 

நாசா


அந்தப் பதிவில், "2025 மகா கும்பமேளா இரவில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து கங்கை நதி யாத்திரை. உலகில் அதிக அளவில் மனிதர்கள் கூடும் இந்த விழா நன்றாக ஒளிர்கிறது" என குறிப்பிட்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  இந்தப் பதிவின் மூலம்  கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்லும் விழா சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web