எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் 143வது பிறந்த நாள் விழா... தமிழக அரசின் சார்பில் மரியாதை!
Dec 11, 2024, 13:07 IST
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் 143வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மரியாதை செலுத்தினார்.
மகாகவி பாரதியாரின் 143வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு எட்டயபுரம் மகாகவி பாரதியார் இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் இராமலட்சுமி சங்கரநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலர் அ.மகாராஜன், வட்டாட்சியர் சங்கர நாராயணன், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
