2028ல் மகாமகம் நடத்தப்படும் தேதி அறிவிப்பு!

 
மகாமகம்
 

கும்பகோணத்தில் 2028 ம் ஆண்டு நடைபெற உள்ள மகாமகத்துக்கான நாள் நிா்ணயம் தொடா்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  கும்பகோணம் மகாத்மியம் குறித்து தினகர சா்மாவும், பஞ்சாங்க கணிதம் குறித்து சென்னை பாம்பு பஞ்சாங்கம் விஜயராகவனும், குருப்பெயா்ச்சி குறித்து ஸ்ரீரங்கம் கோயில் வாக்கிய பஞ்சாங்க ஆசிரியா் கோபாலகுட்டி சாஸ்திரி, ஆற்காடு சீதா ராமய்யா் பஞ்சாங்க ஆசிரியா் கே.என். சுந்தர்ராஜன் அய்யா், ஈரோடு சபரி பஞ்சாங்க ஆசிரியா் எஸ்.என். சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினா். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அபி முகேசுவரா் கோயில் குருக்களும், ஆகம வல்லுநருமான என். பிரசன்ன கணபதி சிவாச்சாரியாா், ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் கோயில் என். தண்டபாணி சிவாச்சாரியாா் செய்திருந்தனா்.  இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமகம் 09.03.2028.நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

மகாமகம்

 புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி  நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்களைக் களைய சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டன.  
அதற்குச் சிவபெருமான் கும்பகோணத்தில் அக்னித் திக்கில் உள்ள ஒரு தீர்த்தத்தில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பௌவுர்ணமி மகாமகநாளில்  முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்” என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன என்பது கதையாக கூறப்படுகிறது.   இந்த மகாமக குளத்தினை நவகன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இந்தத் தீர்த்தம் மகாமக தீர்த்தம் எனவும்  நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன.

மகாமகம்
மகாநட்சத்திரம் சூரியனை விட மூன்று மடங்கு பெரியது  பூமியில் இருந்து அந்த நட்சத்திரம் 77 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஒளியின் வேகத்தில் சென்றால் கூட மகா நட்சத்திரத்தை அடைய 77 ஆண்டுகள் ஆகும். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் நேர்கோட்டில் வந்தால் அது பௌர்ணமி.அந்த வரிசையில் மகா நட்சத்திரம் வந்தால் அது மாசி மகம். அது ஆண்டுக்கு ஒருமுறை வரும். ஆனால் மகாமகம் அன்று சூரியன், பூமி, சந்திரன், மகம் மற்றும் வியாழன் ஆகியவை நேர்கோட்டில் வருகின்றன. இதன் வானியல் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் நம் முன்னோர்கள் மகாமகம் புனித நீராடும் வழக்கத்தை ஏற்படுத்தினர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web