மகாராஷ்டிரா தேர்தல் வாக்குப்பதிவு | பங்குசந்தை விடுமுறை... நள்ளிரவு வரை மெட்ரோ... எவை எல்லாம் இயங்கும்? எவற்றுக்கு எல்லாம் தடை!

 
BREAKING! வாக்குப்பதிவு தொடக்கம்! நீண்ட வரிசையில் திரண்ட வாக்காளர்கள்!

இன்று காலை 7 மணிக்கு மகாராஷ்டிர, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. இந்த தேர்தலில் அதிகபட்ச வாக்காளர் பங்கேற்பை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் பொது விடுமுறையை மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.

288 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் மஹாயுதி கூட்டணிக்கும் (பாஜக, சிவசேனா மற்றும் என்சிபி) எதிர்க்கட்சியான காங்கிரஸ், சிவசேனா (யுபிடி), என்சிபி (எஸ்பி) ஆகிய எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இன்றைய வாக்குப்பதிவு நாளில் எவையெல்லாம் திறந்திருக்கும்? எவற்றுக்கு எல்லாம் அனுமதியில்லை என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க. 

தேர்தல் வாக்குபதிவு வோட்டு தேர்தல்

பொதுப் போக்குவரத்து வழக்கம் போல் இன்று செயல்படும். மாநில தலைநகரான மும்பையில் மெட்ரோ மற்றும் பெஸ்ட் பேருந்துகள் நள்ளிரவு வரை இயக்கப்படும். இதனால் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக பயணிக்க முடியும்.

மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் போன்ற அவசர சேவைகள் நாள் முழுவதும் செயல்படும்.

மகாராஷ்டிரா முழுவதும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். தகுதியுடைய அனைத்து ஊழியர்களும் மாணவர்களும் வாக்காளர்களாக பங்கேற்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது.

அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படும். மும்பையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு

அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் மூடப்பட்டிருக்கும் அதே வேளையில், ஆன்லைன் வங்கி சேவைகள் மற்றும் ஏடிஎம்கள் செயல்படும்.

நிதி மூலதனத்தை தலைமையிடமாகக் கொண்ட மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE) ஆகியவை மூடப்பட்டிருக்கும். வர்த்தக நடவடிக்கைகள் அடுத்த வணிக நாளில், அதாவது வியாழன் அன்று மீண்டும் தொடங்கும்.

மதுக்கடைகள் மூடல்: வழக்கமான தேர்தல் நெறிமுறைகளின்படி மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!