பாஜக எம்.பி., ராமராவ் வடகுடே மாரடைப்பால் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 
பாஜக

 

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராமராவ் வடகுடே (72) இன்று மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

BJP Rajya Sabha MP Ramrao Vadkute Passes Away At 72 After Heart Attack In Delhi

மகாராஷ்டிராவின் தாங்கர் சமூகத்தின் முக்கியத் தலைவராக விளங்கிய ராமராவ் வடகுடே, கடந்த 2019-ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பின்னர் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.

BJP Rajya Sabha MP Ramrao Wadkute passes away after heart attack - India TV News

அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான ராமராவ் வடகுடேவின் மறைவு மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.