பெற்றோர்களே உஷார்... சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவன் மீது பைக் மோதி விபத்து... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
சைக்கிள்

 

மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூர் மாவட்டத்தில், சைக்கிளில் சென்ற 8 வயது சிறுவன் மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோதிய வேகத்தில் சிறுவன் தூக்கி வீசப்பட்ட நிலையில், பெரிய காயங்கள் இன்றி உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பத்ராவதி நகரின் நாகசென் நகர் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. டியூஷன் வகுப்பை முடித்துவிட்டு சிறுவன் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது சாலையைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவன் மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான்.

விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாகச் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 17 வயது சிறுவனையும் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மைனர் சிறுவர்கள் உரிய ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்