“தோஷம் கழிக்க சடங்கு” என கூறி சிறுமியிடம் அத்துமீறல்! கர்ப்பமான 17 வயது சிறுமி..!

 
சிறுமி பாலியல் பலாத்காரம்

 

மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகக் கூறி அதனை நீக்க சடங்கு செய்வதாக நம்ப வைத்து 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சிறுமி கர்ப்பமானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.லத்தூர் மாவட்டம் தாக்ரே சவுக் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்வர் மஹராஜ் என்பவர், 17 வயது சிறுமியிடம் அவரது ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், குறிப்பிட்ட சடங்குகளை செய்வதன் மூலம் அதனை சரிசெய்ய முடியும் என்றும் கூறியதாக தெரிகிறது.

சிறுமி பாலியல் பலாத்காரம்

இதனை நம்பிய சிறுமியிடம், தோஷத்தை நீக்கும் சடங்கு செய்வதாகக் கூறி அவரது வீட்டிலேயே பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும், அவ்வாறு தெரிவித்தால் ஜாதகத்தில் இருந்த தோஷம் மீண்டும் வந்துவிடும் என்றும் கூறி சிறுமியை அவர் மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சிறுமி சம்பவம் குறித்து உடனடியாக யாரிடமும் கூறவில்லை.கடந்த ஜூன் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் சிறுமியின் குடும்பத்தினருக்கு இதுபற்றி தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சிறுமி கர்ப்பம்

புகாரின் அடிப்படையில் புதிய குற்றவியல் சட்டப் பிரிவுகள், போக்சோ சட்டம் மற்றும் மராட்டிய மாநிலத்தின் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.ரமேஷ்வர் மஹராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.