மகாராஷ்டிராவில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதி 18 வயது இளைஞர் பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
கண்டெய்னர்

 

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் கார் ஒன்று கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

தர்மாபாத் தாலுகாவுக்கு உட்பட்ட பாப்ளி பாட்டா அருகே ஸ்ரீநாத் கங்காதர் யெவதிவாட் (18) மற்றும் தன்ராஜ் மீனாஜி லக்மாவாட் (20) ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரியைப் பார்த்ததும் கார் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சறுக்கி, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதியது. பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீநாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தன்ராஜ் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து தர்மாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்