லாரி மீது வேகமாக மோதிய கார்... 3 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!
மராட்டிய மாநிலத்தில் லாரி மீது கார் மோதிய பயங்கர விபத்தில் 3 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்து ஜல்னா நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் பிரதீக் ராம்கிஷன், அவரது மனைவி ஸ்ரேயா மற்றும் அவர்களது 3 வயது குழந்தை ஆகியோர் பயணம் செய்தனர்.

சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் வெப்ருல் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் கார் பலத்த சேதமடைந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் காரில் பயணம் செய்த பிரதீக் ராம்கிஷன், அவரது மனைவி ஸ்ரேயா மற்றும் 3 வயது குழந்தை ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
