மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சிக் கூடங்கள், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

 
மகாவீர் ஜெயந்தி இறைச்சி சிக்கன் மகாவீர் ஜெயந்தி இறைச்சி சிக்கன்

சமண மதத்தின் முக்கியத் திருவிழாவான மகாவீர் ஜெயந்தி வரும் மார்ச் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இறைச்சிக் கூடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போன்று அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பொதுச் சுகாதாரத் துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம், சைதாப்பேட்டை இறைச்சிக் கூடங்கள் அன்றைய தினம் செயல்படாது

மகாவீர் மஹாவீர்

அரசு உத்தரவின்படி, இந்த 4 இறைச்சிக் கூடங்களும் மார்ச் 31-ஆம் தேதி முழுவதும் மூடப்பட்டிருக்கும். எனவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அன்றைய தினம் ஆடு, மாடு மற்றும் இதர கால்நடைகளை வதைப்பதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறைச்சி டாஸ்மாக் மகாவீர் ஜெயந்தி

மகாவீர் ஜெயந்தி முடிந்து, அடுத்த நாள் ஏப்ரல் 1-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் அனைத்து இறைச்சிக் கூடங்களும் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.