சி.மகேந்திரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி... நேரில் நலம் விசாரித்த லயோலா மணி!
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மூத்த தலைவர் சி.மகேந்திரன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் சென்னை கே.எம்.சி. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தற்பொழுது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை குறித்துப் பலரும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடி ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின்படியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனின் வழிகாட்டுதலின்படியும் அவர் நலம் விசாரிக்கப்பட்டார். இதற்காகப் பாடநூல் கழக தலைவர் லயோலா மணி அவர்கள் நேரில் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தார். மகேந்திரனுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் அவர் மருத்துவர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.
தற்போது சி.மகேந்திரன் அவர்கள் உடல்நலமுடன் தேறி வருகிறார் என்றும் விரைவில் பூரண குணமடைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வழக்கம்போல விரைவில் தனது மக்கள் பணிக்குத் திரும்புவார் என்றும் லயோலா மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்திலும் த.வெ.க. கட்சியினர் மத்தியிலும் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
