'பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா' திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் - புதிய அம்சங்கள் அறிமுகம்!

 
பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா

மத்திய அரசின் பிரபலத் திட்டமான 'பிஎம் சூர்யா கர் யோஜனா'  திட்டத்தில் சோலார் பேனல்கள் நிறுவுவதற்கான மானிய முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி வெறும் சோலார் தகடுகளை நிறுவுவதற்கு மட்டும் அல்லாமல், மின் உற்பத்தி, அதன் செயல்திறன் மற்றும் முறையான பராமரிப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

இதன் செயல்பாடுகளைத் துல்லியமாகக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு முறைகள், மின்கல சேமிப்பு  மற்றும் 'சோலார் பாஸ்போர்ட்' போன்ற புதிய அம்சங்கள் பரிசீலனையில் உள்ளன.

வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் தகடுகளை அமைக்க இடமில்லாத நுகர்வோருக்காக 'நெட்-மீட்டரிங்' மற்றும் 'சமூக சூரியசக்தி மின் நிலையங்கள்' போன்ற மாற்று வழிகளும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.