அரசு மருத்துவமனையின் பெரும் அலட்சியம்? வயிற்றில் இறந்த குழந்தையுடன் நடமாடிய இளம்பெண்!

 
இசக்கி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அம்மன்பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் இசக்கிக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஆட்டோ டிரைவரான சுரேஷ்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. 4 முறை குழந்தை உண்டாகியும், கரு கலைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இசக்கி கர்ப்பமானார். 20 நாட்களுக்கு முன்பு இசக்கியை வீட்டுக்கு அழைத்து வந்த உறவினர்கள் அவருக்கு வளைகாப்பு நடத்தினர்.

கடந்த 22ம் தேதி ராஜபாளையம் அரசு மருத்துவர் ஆலோசனையின் பேரில் தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வரும் 25ம் தேதி கர்ப்பிணி பெண்கள் முகாமில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். கடந்த 25ம் தேதி முகாமிற்கு வந்தபோது, ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்க்காமல் குழந்தை நலமாக இருப்பதாக பணியில் இருந்த மருத்துவர் கிரிஜா தெரிவித்தார். இதை நம்பிய இசக்கியும் வீட்டிற்கு சென்றார். கடந்த 3 நாட்களாக உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டதால் இன்று மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கருவில் இருக்கும் குழந்தையின் உடலில் அசைவு இல்லாததால் மீண்டும் ஸ்கேன் செய்ய பரிந்துரைத்துள்ளனர்.

மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்தபோது குழந்தை இறந்து 3 நாட்களாகியிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் சரியான விளக்கம் இல்லாததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இசக்கியின் உடலில் இருந்து இறந்த குழந்தையின் உடலை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலைக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் விருதுநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web