'ஜானி வாக்கர்' படப் பிரபலம் மலையாள நடிகர் ராபின் வர்கீஸ் காலமானார்!
Nov 23, 2026, 10:30 IST
நடிகர் மம்முட்டி நடித்த ‘ஜானி வாக்கர்’ திரைப்படத்தில் ‘ஷெல்லி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகர் ராபின் வர்கீஸ் (56) காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராபின் வர்கீஸ், ‘கொச்சின் கோரஸ்’ மிமிக்ரி குழுவின் மூலம் கலைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்கள் மட்டுமின்றிப் பல்வேறு குறும்படங்களிலும் நடித்துத் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக ஜானி வாக்கர் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.நடிகர் ராபின் வர்கீஸின் மறைவுச் செய்தி அறிந்த மலையாளத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
